Thursday, September 25, 2008

தமிழ்மொழி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்,

பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,

நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,

வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்

வாக்கினிலே ஒளி யுண்டாகும்

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்

கவிப்பெருக்கும் மேவு மாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார்,

தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்.

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்

நசைய்று மனங்கேட்டேன் - நித்தம்

நவமென சுடர்தரும் உயிர்க்கேட்டேன்

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசைய்று மனங்கேட்டேன் - நித்தம்
நவமென சுடர்தரும் உயிர்க்கேட்டேன்.
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்.
அசைவறு மதிகேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

நல்லதோர் வீணை
நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோசொல்லடி சிவசக்தி, - எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்வல்லமை தாராயோ, - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கே?சொல்லடி சிவசக்தி! - நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்நசைய்று மனங்கேட்டேன் - நித்தம் நவமென சுடர்தரும் உயிர்க்கேட்டேன்.தசையினைத் தீசுடினும் - சிவசக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்.அசைவறு மதிகேட்டேன்; இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?

Bharathy

தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

thandavam

அருள்மிகு விநாயகர் போற்றி
திருச்சிற்றம்பலம்நட்சத்திரம்..................... நாள்சேர்பெயர்.............................பெயர்க்காகசெய்யும் இவ்வருச்சனை சேர்ந்த துதியைஐயனே ஏற்று அருள்க ! அருள்கவே !!”
ஓம் அத்தி முகனே போற்றி"
அரியின் மருகா போற்றி"
அருளாம் ஆழி போற்றி"
அறுமுகன் துணைவா போற்றி"
இடைமுடை வயிற்றோய் போற்றி"
இண்டைச் சடையோய் போற்றி"
உத்தமக் களிறே போற்றி"
உமைதிரு மகனே போற்றி"
உயிர்க்குயிராய் இருப்பாய் போற்றி"
எண்குணச் செல்வா போற்றி 10
ஓம் எண்ணிய ஈவாய் போற்றி"
எமையாள் பவனே போற்றி"
எய்ப்பில் வைப்பே போற்றி"
ஏழைபங் காளா போற்றி"
ஐங்கர அமுதே போற்றி"
ஐந்தொழில் புரிவோய் போற்றி"
ஒப்பிலா மணியே போற்றி"
ஒருகைக் கற்பகமே போற்றி"
ஔ¢நிறை வௌ¢யே போற்றி"
ஔ¢ர்முக இறைவா போற்றி 20
ஓம் ஒற்றை மருப்பா போற்றி"
ஓமேனும் உருவே போற்றி"
ஓங்காரப் பொருளே போற்றி"
ஓதிய மறையே போற்றி"
அ·காப் பொருளே போற்றி"
கண்ணுள் மணியே போற்றி"
கருணையங் கடலே போற்றி"
கவளமா களியே போற்றி"
கழியவரு பொருளே போற்றி 30
ஓம் கற்பகக் களிறே போற்றி"
காராணப் பொருளே போற்றி"
கீதக்கிண் கிணியாய் போற்றி"
குடவயிற்று வரதா போற்றி"
குணக் குன்றே போற்றி"
கைம்மா முகனே போற்றி"
கௌவைத் துணையே போற்றி"
சக்தி தலைப்பிள்ளை போற்றி"
சாய்மறைச் செவியாய் போற்றி"
சித்தி விநாயகர் போற்றி 40
ஓம் சிந்தா மணியே போற்றி"
சிவஞானச் செல்வா போற்றி"
சிவானந்த ஔ¢யே போற்றி"
சுருதி விளக்கே போற்றி"
செல்வக் கணேசா போற்றி"
செழுஞ் சுடரே போற்றி"
சைவக் குருவே போற்றி"
சொல்லும் பொருளே போற்றி"
ஞானக் குன்றே போற்றி"
தண்டைக் காலாய் போற்றி 50
ஓம் தத்துவப் பொருளே போற்றி"
தமிழ்நுகர் செவியாய் போற்றி"
தாமரைக் கரத்தாய் போற்றி"
தாழ்தடக் கையனே போற்றி"
தீங்குதீர்ப் பவனே போற்றி"
தெய்வசிகா மணியே போற்றி"
தொப்பை யப்பா போற்றி"
தொளைபடு கரமலை போற்றி"
நந்தா மணியே போற்றி"
நந்தி மகனே போற்றி 60
ஓம் நம்பும் துணையே போற்றி"
நான்மறை விநாயகா போற்றி"
நீறணி பவனே போற்றி"
நுகருமா ரமுதே போற்றி"
நூறாப் பெயரோய் போற்றி"
நெற்றிக் கண்ணாய் போற்றி"
நொந்தவர்க் காவாய் போற்றி"
பவளக் குன்றே போற்றி "
பாரதம் தீட்டியோய் போற்றி"
பிணிக்கு மருந்தே போற்றி 70
“ஓம் பிரணவ ஔ¢யே போற்றி"
புகர்முக வேழா போற்றி"
பூங்கமலப் பாதனே போற்றி"
பூமகள் மருகா போற்றி"
பெற்றோர் மகிழ்வே போற்றி"
பேரானந்த நிறைவே போற்றி"
பொள்ளா மணியே போற்றி"
பொன்றாக் குன்றே போற்றி"
மகா கணபதி போற்றி"
மங்கள மூர்த்தி போற்றி 80
ஓம் மணி விளக்கே போற்றி"
மததாரைக் கடவுளே போற்றி"
மதியளிப் பவனே போற்றி"
மதோற் கடனே போற்றி"
மழஇளம் கன்றே போற்றி"
மறை முதலெ போற்றி"
மாங்கனி பெற்றாய் போற்றி"
மாதவக் குன்றே போற்றி"
முக்கட் கணபதி போற்றி"
முதல்வரு பொருளே போற்றி 90
ஓம் மும்மத வாரியே போற்றி"
மூல முதல்வா போற்றி"
மூவரின் முதலாய் போற்றி"
மூவேறு உருவே போற்றி"
மேலாம் பதமே போற்றி"
மொழிவார்க் கருளே போற்றி"
மோதகச் செங் கையனே போற்றி"
மௌலி தரித்தோய் போற்றி"
யானைதிறை கொண்டாய் போற்றி"
வல்லபை கணவா போற்றி 100
ஓம் விக்கின விநாயகா போற்றி"
வித்தைக் கிறைவா போற்றி"
வெண்தந் தத்தவா போற்றி"
வேட்கை தணிவிப்பாய் போற்றி"
வேத கணபதி போற்றி"
வேதச் சுடரே போற்றி"
வினைவேர் அறுப்பாய் போற்றி"
விநாயகா போற்றி போற்றி 108